பிரபல தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடித்துள்ள ‘டெஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.
இப்படம் குறித்து மாதவன் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, “நான் பெற்ற தேசிய விருதை யாரும் பெரிதாக கொண்டாடவில்லை. இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் வெளியானதால், யாரும் அதைப் பற்றிய முழுமையான உரிமையை எடுத்துக்கொள்ளவில்லை. அதற்காக எந்த விழாவும் நடத்தப்படவில்லை. இதுதான் ஆரம்பத்தில் எனக்கு சிறிது வருத்தம் ஏற்படுத்தியது.

பின்னர் நான் என்னை ஒரே கேள்வியால் சந்தேகிக்கத் தொடங்கினேன் நான் ஏன் ஒரு படம் இயக்குகிறேன்? என் மனத்தில் ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே என் உண்மையான நோக்கம் என்பதை எனக்குள் உணர்ந்தேன்” என்று அவர் கூறினார்.