நடிகர் ராம்சரண், ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்திற்கு பிறகு தற்போது இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பெத்தி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். படம் தொடர்பான படப்பிடிப்புகள் மட்டுமன்றி, குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொள்வதும், வெளிநாடுகளுக்குச் செல்லுவதும் ராம்சரணுக்கு வழக்கமாகவே உள்ளது. இதனைத் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக அவரது மனைவி உபாசனா சோசியல் மீடியாவில் அடிக்கடி பகிர்வதும் அவர்களுக்கு ஒரு சாதாரணமான விஷயமாகவே இருந்து வருகிறது.

சமீபத்தில் இடம்பெற்ற ஒரு பேட்டியில் உபாசனா கூறும்போது, “எங்கள் குடும்பம் எந்த வெளிநாட்டிற்குப் பயணம் சென்றாலும், ஒரு குக்கரை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது ராம்சரணின் கட்டாய உத்தரவு. ஏனெனில், அவர் எந்த நாட்டிற்குப் சென்றாலும், அவருடைய அன்றாட உணவில் குறைந்தபட்சம் ஒரு இந்திய உணவாவது இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறார்.
அதற்காகவே பெரும்பாலும் அவருடைய தாயார் சில இந்திய உணவுகளை ரெடிமேடாக தயாரித்து எங்களிடம் அனுப்பி வைப்பார். நாங்கள் வெளிநாட்டிலுள்ள ஹோட்டல்களில் இருந்து உணவு ஆர்டர் செய்துகொண்டு சாப்பிட்டாலும், அவர் விரும்பும் நம் ஊர் ஸ்பெஷல் வகையான உணவை அந்த இடத்தில் நாங்களே சமைத்து தருகிறோம். அதற்காகத்தான் வீட்டிலிருந்தே குக்கரை எடுத்துச் செல்லும் பழக்கமும் எங்களுக்கு உள்ளது” என தெரிவித்துள்ளார்.