தமிழில் ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த மகளாகவும், ‘பாபநாசம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகளாகவும், ‘ஜில்லா’ படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்த நிவேதா தாமஸ், மலையாள மொழிப் படங்களில் கதாநாயகியாக பல படங்களில் நடித்து பிரபலமானவர்.

சமீபகாலமாக உடல் எடை நிலையில் இருந்த நிவேதா தாமஸ், தற்போது அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு மிகுந்த மாற்றத்துடன் தோன்றுகிறார். அவரை அடையாளம் காண முடியாத அளவுக்கு அவர் உருவம் மாறியுள்ளார் என சமூக ஊடகங்களில் பல உருவக் கேலி மற்றும் விமர்சனங்கள் நிகழ்ந்தன .
இந்நிலையில் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்து அவரது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், இதுபோன்ற விமர்சனங்கள் மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் தான் மீது எந்தவிதமான தாக்கமும் ஏற்படுத்தவில்லை என கூறியுள்ளார் நிவேதா தாமஸ். புதிய கதைகளை கேட்டு, எனது நடிப்புப் பயணத்தை உற்சாகமாக தொடர்கிறேன் என்றுள்ளார்.கடந்த வருடம் இவர் நடித்த ‘35’ என்ற தெலுங்கு திரைப்படம் மிகுந்த வெற்றியை பெற்றது. இந்த படத்தில அளித்த அருமையான நடிப்புக்கு பல விருதுகளும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.