நடிகர் நிவின்பாலி அவருடைய காருக்கு 0011 என்கிற நம்பர் வேண்டுமென விண்ணப்பித்திருந்தார். இது அடிப்படையிலேயே பேன்சி நம்பர் என்பதால் இதற்கு நிறைய போட்டி இருந்தது. போட்டித் தொகையை ஒவ்வொருவரும் உயர்த்திக் கொண்டே வர ஒரு கட்டத்தில் இந்த எண்ணுக்காக 2.34 லட்சம் ரூபாயை பதிவுத்தொகையாக தர நிவின் பாலி ஒப்புக்கொண்டார். ஆனாலும் அதே எண் தான் தங்களுக்கும் வேண்டும் என கேட்ட இன்னொரு தனியார் நிறுவனம் 2.95 லட்சம் வரை தந்து அந்த நம்பரை கைப்பற்றி விட்டது.
