தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக விளங்குபவர் லோகேஷ் கனகராஜ். ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’, ‘கூலி’ உள்ளிட்ட கேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர். இவரின் அடுத்த இயக்கம் என்ன என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகப் போகிறார் என்ற தகவல் வெளியாகி வந்தன..

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் ஒரு புதிய கேங்ஸ்டர் திரைப்படத்தை இயக்க உள்ளார். அதன் பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெறும் என தகவல் வெளியானது.
இப்படத்தில் நடிக்க லோகேஷ் கனகராஜ் சண்டை மற்றும் தற்காப்புக் கலை பயிற்சிகளில் ஈடுபட்டு வந்ததோடு தற்போது படத்திற்கான புதிய கெட்அப்பிலும் தயாராகி வருகிறார். பல மாஸ் ஹீரோக்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தானே ஒரு ஹீரோவாக அறிமுகமாக இருப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

