நடிகர் சூர்யாவின் 47வது படத்தை, மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஆவேசம்’ படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்குகிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள தனது தயாரிப்பு நிறுவனமான ழகரம் பேனரில் தயாரிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.

படத்திற்கான முன்தயாரிப்பு பணிகளில் தற்போது ஜித்து மாதவன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கவுள்ளதாகவும், முக்கிய கதாபாத்திரங்களில் பகத் பாசில் மற்றும் நஸ்லின் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் துவங்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என கூறப்படுகிறது .இந்த புதிய திட்டத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

