மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.அடுத்ததாக, துல்கர் சல்மான் ‘காந்தா’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இது தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டு உருவாகியதாக கூறப்படுகிறது.

இப்படத்தில், ‘மிஸ்டர் பச்சன்’ படத்தின் புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ‘காந்தா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
முதல் அறிவிப்பில் படம் செப்டம்பர் 12 அன்று வெளியிடப்படுவதாக கூறப்பட்டிருந்தது. பின்னர், படக்குழு ‘காந்தா’ திரைப்படம் வரும் நவம்பர் 14 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.