பிப்ரவரி 21 அன்று தமிழ் திரையரங்குகளில் ‘டிராகன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ஈடாட்டம், பிறந்தநாள் வாழ்த்துகள், பல்லவபுரம் பிளாட் எண் 666’ உள்ளிட்ட ஐந்து புதிய படங்கள் வெளியாக உள்ளன. இதன் கூடுதல் தகவலாக, தமிழிலும் சேர்த்தே எடுக்கப்பட்டதாக கூறப்படும் ‘ராமம் ராகவன்’ படமும் வெளியிடப்பட உள்ளது.
இந்தப் படங்களில் ‘டிராகன்’ மற்றும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் எனக் கருதப்படுகிறது. இளம் ரசிகர்களை முக்கியமாக இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த இரு படங்களிலும், ‘டிராகன்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்பதிவில் முன்னிலையில் இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், ‘லவ் டுடே’ படத்தின் மூலம் பெரிய வெற்றியைப் பெற்ற பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தில் நடிப்பதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மற்றொரு பக்கம், தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் அறிமுக நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் இப்படத்தின் பிரிமியர் காட்சி இன்று மாலை சென்னையில் நடைபெறவுள்ளது.இரண்டு படங்களின் முதல் காட்சிகள் முடிந்த பிறகு, எந்தப் படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறுகிறதோ, அந்தப் படம் வார இறுதியில் அதிக வசூல் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.