நிவின் பாலி மற்றும் நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் வெளியான உடனே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. ரசிகர்களின் விருப்பமான நடிகர்களின் பட்டியலில் எப்போதும் முன்னணி இடத்தில் இருப்பவர் நிவின் பாலி. இப்படத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள நிலையில், இந்த படத்தை புதிய இயக்குநர்களான ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் எழுதி இயக்கியுள்ளனர். மேவ்ரிக் மூவிஸ் தயாரிப்பில், நிவின் பாலியின் சொந்த நிறுவனமான பாலி ஜேஆர் பிக்சர்ஸ் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன.
நேற்று வெளியிடப்பட்ட டீசர், பள்ளி வாழ்க்கையின் வண்ணமயமான சூழலையும், மாணவர்களின் பரபரப்பான உலகையும் வெளிப்படுத்துகிறது. மேலும், இந்தக் கதை மாணவர்களை மையமாகக் கொண்டதாக இருக்கும் என்பதை டீசர் தெளிவுபடுத்துகிறது. காமெடி, வேடிக்கை, அதிரடி, சஸ்பென்ஸ் ஆகிய அனைத்தையும் இணைத்த கமெர்ஷியல் எண்டர்டெய்னர் என ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றனர். இதில், நிவின் பாலி தனது ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் துடுக்கான, குறும்பு மிக்க ஹரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதே சமயம், நயன்தாரா வலிமையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். “லவ் ஆக்ஷன் டிராமா” திரைப்படத்திற்குப் பிறகு, ஆறு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்திருக்கும் நிவின் பாலி – நயன்தாரா கூட்டணி ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், இந்தப் படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் முருகதாஸ், சரத் ரவி, உதய் மகேஷ், வெட்டை முருகன், ஜெயகுமார் ஜனகிராமன், விஜய் சத்யா, மாத்யூ வர்கீஸ், ராஜா ராணி பாண்டியன், தீப்தி, கீரண் கொண்டா, காமருதீன் K உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருப்பது சிறப்புக்குரியது.