தெலுங்குத் திரையுலகத்தில் வந்த முக்கியமான படங்களில் ஒன்று ‘சிவா’. ராம்கோபால் வர்மா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், நாகார்ஜுனா, அமலா, ரகுவரன் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் 1989ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றது. பிற்காலத்தில் இந்தியாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராகப் பேசப்பட்ட ராம்கோபால் வர்மா இயக்கிய முதல் படம் ‘சிவா’. அப்படம் தமிழில் ‘உதயம்’ என்ற பெயரில் டப்பிங் ஆகி இங்கும் 175 நாட்களைக் கடந்து ஓடி வெள்ளிவிழாப் படமாக அமைந்தது. அந்தக் காலத்து கல்லூரி இளைஞர்களைக் கவர்ந்த ஒரு படமாக தமிழ், தெலுங்கில் அமைந்தது

.