விஷால் நடிப்பில் வெளிவந்த திமிரு படத்தின் மூலம் வில்லியாக நடித்து பிரபலமான ஸ்ரேயா ரெட்டி சமீபத்தில் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து, ஸ்ரேயா ரெட்டி தற்போது இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் உருவாகும் ஓஜி படத்தில் நடித்து வருகிறார்.
பவன் கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடிக்கிறார். அதோடு, பிரகாஷ் ராஜ், அர்ஜுன் தாஸ், ஷாம், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், தனது ஓஜி பட கதாபாத்திரம் குறித்து சலார் படத்தில்து ஸ்ரேயா ரெட்டி கூறுகையில், ‘ஓஜி’யில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இது சலார் படத்தில் நான் நடித்த ராதா ராமா மன்னர் கதாபாத்திரத்தைப் போல அல்ல. இது முற்றிலும் மாறுபட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.