தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழ் சினிமாவில் ‘முகமூடி’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு, விஜய்க்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து பெரும் புகழைப் பெற்றார். இதைத் தொடர்ந்து, சூர்யாவுடன் ‘ரெட்ரோ’, ஷாஹித் கபூருடன் ‘தேவா’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது, மீண்டும் விஜய்க்கு ஜோடியாக ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ‘தேவா’ படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இதைப் பற்றிப் பேசும் போது, பூஜா ஹெக்டே, தனது சினிமா பயணத்தை ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி போலவே உணர்ந்ததாக தெரிவித்தார்.
அவர் கூறுகையில், நான் சினிமாவிற்கு வந்து 12 ஆண்டுகள் நிறைந்துவிட்டது. இந்த பயணம் எனக்கு ரோலர் கோஸ்டரில் பயணம் செய்ததுபோல இருந்தது. இந்த பாதையில் பல ஏற்றங்களும் இறக்கங்களும், வெற்றிகளும் தோல்விகளும், உயர்வுகளும் தாழ்வுகளும் இருந்தன” என உணர்ச்சிப்பூர்வமாக பகிர்ந்துள்ளார்.