Touring Talkies
100% Cinema

Tuesday, July 8, 2025

Touring Talkies

இந்த வதந்திகளுக்கு என் கணவர் தான் காரணம் – நடிகை சோனாக்சி சின்ஹா டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தான் கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் பரவிய வதந்திக்கு தனது கணவரே காரணம் என நடிகை சோனாக்சி சின்ஹா கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியான ஒரு புகைப்படத்தில் சோனாக்சி சின்ஹாவின் உடல் எடை அதிகரித்தது போன்ற தோற்றம் ஏற்பட்டதால், அவர் கர்ப்பமாக இருக்கலாம் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. இந்த தகவல்களை நம்பிய ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சோனாக்சி சின்ஹா, தனது கணவருடன் வாட்ஸ்அப் மூலம் நடந்த உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில், தனது கணவர் எப்போதும் நேரம் பாராமல், சுவையாக சாப்பிட ஏதாவது உணவுப் பொருட்களைத் தொடர்ந்து தனக்கு வாங்கிக்கொண்டு வருகிறார் என்பதாலும், அதனால் தான் தனது உடல் எடை அதிகரித்துவிட்டது என்றும் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News