நடிகர் அருண்பாண்டியனுக்கு கிரணா, கவிதா, கீர்த்தி என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இதில் கீர்த்தி பாண்டியன் ‘தும்பா’, ‘அன்பிற்கினியாள்’, ‘கண்ணகி’, ‘ப்ளூ ஸ்டார்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர்தான் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்துள்ளார். கீர்த்தி பாண்டியன் சினிமாவிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறார்.

நடிகர் உதயகுமார் நடிப்பில், அவர் நடித்துள்ள திரைப்படம் ‘அஃகேனம்’. இதற்கு ‘ஆயுத எழுத்து’ என்ற அர்த்தம் உள்ளது. மூன்று கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டிருப்பதால் இப்படத்திற்கு இந்த தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அருண்பாண்டியனே தயாரித்துள்ளார். மேலும் அவர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவும் இருக்கிறார். படம் ஜூலை 4ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
“படக் கதையின் படி உங்கள் அப்பாவுடன் சண்டை காட்சிகள் உள்ளனவா?” எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது, கீர்த்தி பாண்டியன் பதிலளிக்கும்போது, “கதையை இப்போது சொல்லமாட்டேன். இதில் நான் முதன்முறையாக கால் டாக்சி டிரைவராக நடித்திருக்கிறேன். எனக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். நடிக்கவில்லை என்றால் ரேசிங் டிரைவராக இருந்திருப்பேன். அந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளித்தது.
ஒரு பாடல் காட்சியில் என் அப்பா மிகவும் இளமையான தோற்றத்துடன் நடித்துள்ளார். ஒடிசா பின்னணியில் நடைபெறும் அந்த பாடலை பார்த்ததும் நானும் ஆச்சரியமடைந்தேன். டி-ஏஜிங் தொழில்நுட்பம் இல்லாமலே அவரை இளமையாகக் காண முடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. பரத் வீரராகவன் இசையமைக்கிறார். படத்தின் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பு படக்குழுவை உற்சாகப்படுத்தியுள்ளது. இயக்குநர், இசையமைப்பாளர், எடிட்டர் உள்ளிட்ட அனைவரும் புதுமுகங்களே,” எனத் தெரிவித்தார்.