சூப்பர் சிங்கர் ஜுனியர், இந்தியன் ஐடல் ஜுனியர் ஆகிய டிவி இசைப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நித்யஸ்ரீ வெங்கடரமணன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பாடி வருகிறார். எந்த ஒரு பாடகர், பாடகிக்கும் இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது பெரும் கனவாக இருக்கும். அப்படி ஒரு கனவு நித்யஸ்ரீக்கு நடந்து முடிந்துள்ளது.இளையராஜா இசையில் உருவாகி வரும் மே 30ம் தேதி வெளியாக உள்ள ‘சஷ்டிபூர்த்தி’ தெலுங்குப் படத்தில் பாடியுள்ளார். ‘ராத்ரன்த ரச்சே’ என்ற அந்தப் பாடலில் இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்பாடல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
