Tuesday, January 7, 2025

என்னுடைய திருமண முடிவு திடீரென எடுத்தது இல்லை… மனம் திறந்த சாக்ஷி அகர்வால்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்த சாக்ஷி அகர்வால் தற்போது கதாநாயகியாக தனது பயணத்தை தொடங்கியுள்ளார். மாடலிங்கிலும் தனக்கான ஒரு இடத்தை உருவாக்கியுள்ள அவர், தனது நீண்டகால நண்பர் நவ்னீத் என்பவரை ஜனவரி 2-ம் தேதி கோவாவில் திருமணம் செய்து கொண்டார். அங்கு நடந்த இந்த நிகழ்வில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர், மற்றும் தனியார் ஓட்டலில் மிக இனிதாக இந்த திருமணம் நடந்தது.

திருமணத்தின் பின்னர், தனது கணவர் நவ்னீத் உடன் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் சாக்ஷி. அவர் கூறியதாவத,”நவ்னீத்தை நான் 15 வருடங்களாக, சினிமாவிற்கு முன்பே அறிந்து வருகிறேன். ஐடி துறையில் இருந்து நான் சினிமாவிற்குச் செல்ல முடிவு செய்தபோது எனக்கு முழு ஆதராவாக இருந்தவர். இளம் வயதிலேயே நண்பராக இருந்த அவரை திருமணம் செய்வது கடவுளின் ஆசீர்வாதம் என்று உணர்கிறேன். என் வாழ்க்கையின் நல்லதும் கெட்டதும் அனைத்தையும் அறிந்த ஒரே நபர் அவர்தான். அவர் என் வாழ்க்கையின் முழுமையான பங்குதாரராக உள்ளார்.தமிழில் இரண்டு, மூன்று படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. கன்னடம் மற்றும் மலையாளத்திலும் ஒரு படம் வெளியிட தயாராக உள்ளது. திருமணத்திற்கு பின் பல நடிகைகள் தொடர்ந்து நடித்து வெற்றியடைந்துள்ளார்கள். அதுபோல நாமும் கடின உழைப்புடன் இருக்கும்போது நிச்சயமாக வெற்றி பெற முடியும்.

திருமணத்தில் நான் எந்த அவசரத்தையும் காட்டவில்லை. என் மனதிற்கு சரியாக பட்டதால் இந்த முடிவை எடுத்தேன். நவ்னீத் தனது அமெரிக்க வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்கு மாறி, புதிய வேலை தேட முயற்சிக்கிறார். அவருடைய இந்தத் தீர்மானத்துக்கு நன்றி தெரிவிக்க நான் அவருக்காக ஒன்றை செய்ய வேண்டும் என நினைத்தேன். அதனால் திருமணம் செய்தேன். இது ஒரு அவசர முடிவு இல்லை.நான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். நாளை முதலே படப்பிடிப்புக்கு செல்ல உள்ளேன். நவ்னீட் உடன் இருக்கும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரமும் எனக்கு ஹனிமூன் போன்றது. அவர் எனக்கு சிறந்த நண்பர், இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என கூறினார் சாக்ஷி.

- Advertisement -

Read more

Local News