காதலிக்க நேரமில்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ஜெயம் ரவி, ‘இழு இழு’ பாடலுக்கு மேடையில் அசத்தலான நடனத்தை வெளிப்படுத்தினார். அவருடைய நடனத்திற்காக ரசிகர்கள், “இந்த அளவுக்கு அழகும், உற்சாகமும் எங்கு மறைந்திருந்தது?” என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த படத்தில் தன் 22 வருட கனவு நிறைவேறியதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். தன் சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து நடித்து வரும் நிலையில், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் நடிக்க வேண்டும் என்ற கனவு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஜெயம் ரவி, ஏஆர் ரஹ்மான் இசையுடன் தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’, ‘பொன்னியின் செல்வன் 2’, ‘ஜெனீ’, மற்றும் தற்போதைய ‘காதலிக்க நேரமில்லை’ ஆகிய 4 படங்களில் நடித்ததை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.அதேபோல, ஒரு பெண் இயக்குநருடன் முதல் முறையாக இணைந்த அனுபவத்தைப் பற்றி அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். குறிப்பாக, இயக்குநர் கிருத்திகா, எதையும் இயல்பாகச் செய்ய கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.