இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள் இன்று சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள அவருடைய ஸ்டூடியோவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது அளித்த பேட்டியில் ‘துணை ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி. இன்றைய பிறந்தநாளில் இனிப்பான செய்தியை சொல்லப்போகிறேன். லண்டனில் நான் சிம்பொனி செய்தேன். அதை இங்கே இருப்பவர்கள் பலரால் கேட்க முடியவில்லை. அதனால், அதே ராயல் பில்ஹார்மோனிக் குழுவை இங்கே வரவழைத்து, ஆகஸ்ட் 2ம் தேதி மீண்டும் சிம்பொனி இசைக்க உள்ளேன். தமிழக முதல்வரும் இதற்கு வரவேற்பு, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
