Saturday, January 25, 2025

தனது மகள் பவதாரிணியை உருக்கத்துடன் நினைவுகூர்ந்து வீடியோ பதிவிட்ட இசைஞானி இளையராஜா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி காலமானார். பவதாரிணி மறைந்து ஒரு ஆண்டு ஆன நிலையில், இளையராஜா தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்திய உருக்கமான ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், என் அருமை மகள் பவதா (பவதாரிணி) எங்களைவிட்டு பிரிந்த நாள். அன்பின் திருப்புமுனையாக இருந்த என் மகள் பிரிந்த பின்பே, அவளின் அன்பின் ஆழத்தை உணர்ந்தேன். என் முழு கவனமும் இசையில் இருந்ததால், என் குழந்தையின் வாழ்வில் என் வேலைகளால் நானே அவர்களை புறக்கணித்தேனோ என்பதே இன்று எனக்கு வேதனையாக இருக்கிறது.

இந்த வேதனையே என்னை ஆறுதல்கொடுத்த இசையாக மாறி எனக்கு ஓரளவு சாந்தியையும் தந்தது. பிப்ரவரி 12 அன்று பவதாவின் பிறந்த நாளாக இருக்கிறது. அதே நாளில் அவருக்கான திதி செய்ய வேண்டியதால் அதை நினைவு நாள் நிகழ்வாக நடத்த விரும்புகிறேன். அந்த நிகழ்வில் அனைத்து இசைக்கலைஞர்களும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என் மகள் பவதாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன், என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News