கர்நாடக மாநிலம், உடுப்பி அடுத்துள்ள கொல்லூரில் அமைந்துள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு நேற்று சென்று வழிபட்டார். உடன் அவரது மகனும், இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவும், பேரன் யத்தீஸ்வரும் சென்றனர். இளையராஜா குடும்பத்தினர் சார்பில் மூகாம்பிகைக்கு வைரத்தால் ஆன கிரீடம், தங்கத்தால் ஆன நெக்லஸ் மற்றும் அங்குள்ள வீரபத்திர சுவாமிக்கு தங்கத்தால் ஆன வாள் ஆகியவை காணிக்கையாக வழங்கப்பட்டது
