ரோஜா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்த இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் 33 ஆண்டுகளாக இந்தியத் திரையுலகில் நிறைவு செய்துள்ளார். தனது தனித்துவமான இசையால் பலரின் மனதை வென்றுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற இந்திய மொழித் திரைப்படங்களிலேயே அல்லாமல், பல வெளிநாட்டு திரைப்படங்களிலும் தனது இசைத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது, பாப்டா விருது, கிராமி விருது போன்ற சர்வதேச விருதுகளும், இந்திய அரசின் தேசிய விருதுகள், பத்மஸ்ரீ விருது, மாநில அரசுகளின் பல விருதுகளும் அவருக்குக் கிடைத்துள்ளன.
அவரது இசையின் மூலம் தமிழ்த் திரைப்பட இசையும், ஹிந்தி திரைப்பட இசையும் உலகம் முழுவதும் பேசப்பட்டன. எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல், தன் இசை உலகில் முழுமையாக மூழ்கி, தொடர்ந்து பயணித்து வருபவர். அடுத்த சில ஆண்டுகளுக்கான திரைப்படங்களில் இசையமைக்கும் பணியில் ஏற்கனவே மிகுந்த பிஸியாக உள்ளார். உலகின் எங்குச் சென்றாலும், தன்னை ‘சென்னை வாசி’ என்று பெருமையாக அறிமுகப்படுத்திக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.