தென்காசி பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தின் 123ம் ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் பரத்வாஜ் கலந்து கொண்டார். இவர் தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள இரவணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.நிகழ்வில் பேசிய பரத்வாஜ், பாடல் பாடி தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் இசையமைத்து பாடிய ‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…’ பாடலை பாடினார். பின்பு பேசிய அவர், “நான் இரவணசமுத்திரம் பகுதியில் பிறந்தவன். ஆனால் டெல்லியில் வளர்ந்தவன். இரண்டுக்கும் ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் இருக்கிறது. டெல்லியில் இருந்து இங்கு வரும்போதெல்லாம் இரயில்களில் தான் வருவோம்” என்றார்.
