Monday, October 28, 2024

ரீமிக்ஸ் இசை கலாசாரத்துக்கு ‘நோ’ தெரிவித்த இசையமைப்பாளர் ஏ‌.ஆர்.ரகுமான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகில் சமீப காலங்களில் பாடல்களின் ரீமிக்ஸ் கலாசாரம் அதிகரித்து வருகின்றது. பழைய திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களை தற்போது ரீமிக்ஸ் செய்து, அவற்றை புதிய படங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பலரின் பாடல்களும் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ரீமிக்ஸ் கலாசாரத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் நிலவுகின்றன. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், பாடல் ரீமிக்ஸ் கலாசாரத்துக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “ஆறு வருடங்களுக்கு முன்பு வெளியான பாடல்களையே இப்போது மீண்டும் காப்பி அடித்து ரீமிக்ஸ் செய்கிறார்கள். அதை பெருமையாகப் பேசுகின்றனர். இது முற்றிலும் தவறு. ஒரிஜினல் பாடல்களை உருவாக்கியவர்களின் அனுமதி இல்லாமல் அந்த பாடல்களை ரீமிக்ஸ் செய்வது சரியல்ல. தற்போது இசையில் ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை உருவாக்கும். இதன் விளைவாக பலருக்கும் வேலை இழப்புகளை ஏற்படுத்தும் நிலை உருவாகலாம்,” என்றார்.

- Advertisement -

Read more

Local News