Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

‘மர்மர்’ தமிழ் சினிமாவின் முதல் Found Footage ஹாரர் திரைப்படம்… அப்படி என்ன இது புது பேய் கதை?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹேமந்த் நாராயணன், மர்மர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது தமிழில் உருவாக்கப்பட்ட முதல் Found Footage ஹாரர் திரைப்படமாகும். Found Footage ஹாரர் திரைப்படங்களில் காட்சிகள் பெரும்பாலும் டேப் ரெகார்டர், சிசிடிவி கேமரா ஃபூட்டேஜ் போலவே காட்சியளிக்கப்படும். இதன் மூலம் அந்த அமானுஷ்ய சம்பவ உணர்வை பார்வையாளர்களுக்கு உண்மையாகவே கடத்தும்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை ஸ்டான் அலோன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் “கபா கபா கபிஸ்து” என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.

படத்தின் ஒளிப்பதிவை ஜேசன் வில்லியம், மற்றும் படத்தொகுப்பை ரோகித் மேற்கொள்கிறார். இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களின் விவரத்தை விரைவில் வெளியிடுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. படக்குழு, திரைப்படத்தை வரும் பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News