Wednesday, October 23, 2024

மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் கால் பதிக்கும் மோனிஷா சென்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாடலிங் துறையில் முன்னணியில் இருப்பவர் மோனிஷா சென். பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவர் புதிய தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சினிமாவில் பிரபல நடிகர்களின் அற்புதமான நடிப்பு, அர்ப்பணிப்பு, கமர்ஷியல் விஷயங்கள் என இவை அனைத்தும் தென்னிந்திய சினிமாவை பெருமை கொள்ள செய்கிறது. இந்த சிறப்புகள் காரணமாகவே தென்னிந்திய சினிமாவில் நானும் அடியெடுத்து வைப்பதில் பெருமை கொள்கிறேன். இது எனக்கான நேரம். படத்தை பற்றிய தகவல்களை தயாரிப்பு நிறுவனம் முறைப்படி வெளியிடும். ஆர்வம் காரணமாக எனது ரசிகர்களுக்கு நான் இந்த தகவலை முன்னரே சொல்கிறேன். என்கிறார், மோனிஷா.

- Advertisement -

Read more

Local News