Touring Talkies
100% Cinema

Wednesday, September 10, 2025

Touring Talkies

சம்பளம் பெறாமல் வெளிநாட்டு பண்ணையில் வேலை செய்யும் மோகன்லால் மகனும் நடிகருமான பிரணவ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சினிமா உலகத்தில் வாரிசு நடிகர்கள் பெரும்பாலும் அவர்களுடைய முதல் பட வெற்றியோ தோல்வியோ எந்த அளவிற்கும் அடுத்த படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் வருகிறார்கள். ஆனால் மோகன்லாலின் மகன் பிரணவ் இதில் மாறுபட்டவர். கடந்த ஆறு ஏழு ஆண்டுகளில் வெறும் நான்கு படங்களில் மட்டுமே நடித்துள்ள அவர், அதில் இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இவரிடம் கதையை சொல்ல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் காத்திருந்தாலும், தொடர்ந்து படங்களில் நடிக்கும் ஆர்வம் அவருக்கில்லை. மாறாக, இயற்கையை ரசிக்க மலைப்பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் பயணம் செய்ய விரும்புகிறார்.

தற்போது, ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பண்ணையில் அங்குள்ள வேலைகளை கற்றுக் கொள்ளும் அப்ரண்டிசாக சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். அங்கு கற்றறிந்ததை வைத்து பண்ணை தொடங்கும் திட்டம் இல்லையென்றாலும், வாழ்க்கையின் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக இதைச் செய்கிறார். இதைப் பற்றி பிரணவின் அம்மா சுசித்ரா மோகன்லால் கூறியதாவது, தனது மகன் வருடத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் அவர் என் பேச்சைக் கேட்பதில்லை. கதைகள் கேட்டு வந்தாலும், அது அவருக்கு பிடிக்குமா என்பது தான் முக்கியம். அவரது முடிவே இறுதியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News