ரீ ரிலீஸான மோகன்லாலின் சோட்டா மும்பை திரைப்படத்திற்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதனை தொடர்ந்து சூட்டோடு சூடாக தற்போது மோகன்லால் 2001ல் நடித்து வெளியான ராவண பிரபு திரைப்படமும் 4கே டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.இது குறித்து அறிவிப்பையும் பட வெளியீட்டாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர். இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக வசுந்தரா தாஸ் நடிக்க முக்கிய வேடத்தில் நெப்போலியன் நடித்திருந்தார். பிரபல இயக்குனர் ரஞ்சித் இயக்கியிருந்தார். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.
