தருண் மூர்த்தியின் இயக்கத்தில், மோகன்லால் மற்றும் ஷோபனா நடித்துள்ள ‘துடரும்’ படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் பெரிய அளவில் விளம்பரங்கள் இன்றி வெளியாகியிருந்தாலும், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது.

ரசிகர்கள், ‘துடரும்’ படத்தை ‘திரிஷ்யம்’ போன்று ஒரு சிறந்த குடும்பத் திரில்லராகச் சுட்டிக்காட்டி பாராட்டி வருகின்றனர். மேலும், “ஓஜி மீண்டும் வந்துள்ளார்” என்றும், “தரமான பேன்பாய் சம்பவம்” என்றும் பெருமையாகக் கூறி வருகின்றனர்.
முன்னதாக, மோகன்லால் நடித்த ‘எல் 2 எம்புரான்’ படம் வசூலில் சிறந்த சாதனையை நிகழ்த்தியிருந்தாலும் விமர்சனங்கள் கலந்துவந்ததைக் குறிப்பிடத்தக்கது.