மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஹிருதயபூர்வம்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை இயக்கியுள்ளவர் பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு. இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான டிரைலரில், மோகன்லால் மற்றும் இன்னொரு நடிகர் பஹத் பாசில் குறித்து உரையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், மோகன்லால் தனது திரைப்படத்தில் பஹத் பாசிலை பெருமைப்படுத்தும் வகையில் பேசியதற்காக, தனது மனைவி நஸ்ரியா, சகோதரர் பர்ஹான் பாசில் ஆகியோருடன் மோகன்லாலின் வீட்டுக்கு நேரில் சென்று நன்றியைத் தெரிவித்துள்ளார் பஹத் பாசில். அந்த சந்திப்பின்போது, மோகன்லாலின் மனைவியும், மகனும், நடிகருமான பிரணவ் ஆகியோரும் இருந்தனர். மேலும், பஹத் பாசிலை வைத்து ‘பாச்சுவும் அற்புத விளக்கும்’ என்ற படத்தை இயக்கிய அகில் சத்யன் (இயக்குநர் சத்யன் அந்திக்காட்டின் மகன்) தான், ‘ஹிருதயபூர்வம்’ திரைப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.