ஹனுமான் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா. தற்போது அவர் நடித்துள்ள மிராய் படம் செப்டம்பர் 12 அன்று தமிழிலும் வெளியாகிறது.
இதுகுறித்து தேஜா சஜ்ஜா கூறுகையில்:
“மிராய் என்றால் எதிர்காலம், மந்திரக் கோல் என அர்த்தம். ஹனுமான் படத்திற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு அசாதாரணம். அந்த படத்தில் ஹனுமன் இருந்தார்; இந்த படத்தில் ராமர், காசி பின்னணியில் கதை நகர்கிறது. இப்படிப் பட்ட பேண்டஸி கதைகளில் நடிப்பது எனக்கு பெருமை. இந்து தர்மத்தை சினிமா வழியாக சொல்லுவதில் மகிழ்ச்சி,” என்றார்.
அவர் மேலும், “மிராய் படத்தை சீன, ஜப்பானிய மொழிகளிலும் தயாரித்துள்ளோம். காரணம், அந்த நாடுகளில் இந்திய படங்களுக்கு பெரிய மார்க்கெட் உள்ளது. சண்டைக் காட்சிகளுக்காக தாய்லாந்து மாஸ்டர்களை அழைத்தோம். 20 நாட்கள் பயிற்சி பெற்று, டூப் இல்லாமல் நேரடியாக சண்டைக் காட்சிகளில் நடித்தேன். இப்படம் சர்வதேச தரத்தில் உருவாகியிருக்கும்,” என்றும் தெரிவித்தார்