இயக்குனர் கார்த்தி கட்டனேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் மிராய்.
மிகப்பெரிய செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், கல்கி திரைப்படம் போன்று அதிக விஎஃப்எக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ளது.
வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது. இதற்கிடையில் இன்று படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்ற ஆக்சன் காட்சிகள் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.