கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக், மஞ்சு மனோஜ், ஸ்ரேயா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த தெலுங்குப் படம் ‘மிராய்’. பான் இந்தியா படமாக வெளியான இப்படம் 100 கோடி வசூலை நெருங்கியுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் தரமாகத் தயாராகி வெளிவந்து பலரின் பாராட்டுக்களை இப்படம் பெற்று வருகிறது. நேற்று இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத், படத்தின் நாயகன் தேஜாவுக்கும், இயக்குனர் கார்த்திக்குக்கும் கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார். அவர்களுக்குப் பிடித்த கார் எதுவாக இருந்தாலும் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார். இதை மகிழ்வுடன் இருவரும் ஏற்றுக் கொண்டனர்.
