தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, இந்திப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமன்னா மற்றும் இந்தி நடிகர் விஜய் வர்மா காதலில் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டனர். ஹோலி பண்டிகையில், இருவரும் தனித்தனியாக பங்கேற்றதிலிருந்தே, அவர்களின் பிரிவு உறுதி என தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

இதுமட்டுமல்ல, நண்பர்களுடன் தனது பிரேக் அப்-ஐ கொண்டாடும் வகையில் விருந்து ஏற்பாடு செய்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தமன்னா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஒரு பதிவு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில், வாழ்க்கையில் அற்புதங்கள் நடந்தேறுமென எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். நாம் தான் அற்புதங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.”என்று குறிப்பிட்டுள்ளார்.
காதல் தோல்வியால் ஏற்பட்ட மனவேதனையிலிருந்து மீள்வதற்காகவே அவர் இந்தப் பதிவை வெளியிட்டதாக கூறப்படுகிறது. “தைரியமாக இருங்கள், காதல் தோல்வி ஒரு முடிவு அல்ல, புதிய தொடக்கம்!” என அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி, சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.