அம்மணி, மாவீரன், தண்டட்டி, அயலான் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் செம்மலர் அன்னம். சில குறும்படங்களையும் இயக்கி உள்ளார். இவர் முதன்முறையாக ‛மயிலா’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படம் அடுத்தாண்டு நெதர்லாந்தில் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8 வரை நடக்கும் 55வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பிரைட் ப்யூச்சர் பிரிவில் திரையிட தேர்வாகி உள்ளது.கிராம பின்னணியில் உருவாகி உள்ள இப்படம் தனது சுதந்திரத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் போராடும் பெண்ணான பூங்கொடியின் கதையைச் சொல்கிறது.


