கர்நாடக மாநிலத்தில் டிக்கெட் கட்டணங்களுக்கான உச்ச வரம்பு ரூ.200 மட்டும் என கர்நாடகா மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து நேற்று வெளியிட்ட ஆணை ஒன்றில், அனைத்து மொழிப் படங்களுக்கான, மல்டிபிளக்ஸ் உள்ளிட் அனைத்து விதமான தியேட்டர்களும் பொழுதுபோக்கு வரி உட்பட 200 ரூபாய்க்கு மிகாமல் கட்டணத்தை வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்த ஆட்சேபணை எதுவும் இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவைப் பொறுத்தவரை பெங்களூரூ உள்ளிட்ட மாநகரங்களில் சினிமா டிக்கெட் கட்டணம் என்பது மற்ற மாநிலங்களை விட அதிகம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வார நாட்களில் ஒரு கட்டணம், வார இறுதி நாட்களில் இன்னும் அதிகமான கட்டணமாக உள்ளது. ஐமாக்ஸ், 4டிஎக்ஸ் தியேட்டர்களில் 600 ரூ முதல் 1000 ரூ வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
