Monday, February 10, 2025

மசாலா கம்பெனி ஓனர் டூ பிரபல நடிகர் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரை சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் ரவிச்சந்திரன். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் அதிக புகழ் பெற்ற இவர் சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். மசாலா கம்பெனி ஓனராக இருந்த ரவிச்சந்திரன் தான் நடிகரான கதையை அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் தனது நடிப்பிற்காக முதல் விருதினை பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் ரவிச்சந்திரன் அந்த பேட்டியில், ‘என்னுடைய சொந்த ஊர் கும்பகோணம். நடிப்பிற்கும் எங்கள் குடும்பத்திற்கும் சம்மந்தமே கிடையாது. ஊரில் மசாலா கம்பெனி ஒன்று நடத்தி வந்தேன். அதில் நஷ்டம் ஏற்பட்டு ஊருக்குள் மிகப்பெரிய அவமானம் ஆகிவிட்டது. வேலை தேடி தான் சென்னை வந்தேன். அப்போது தான் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News