Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

வேட்டையன் படத்தை பின்தொடர்ந்து ரிலீஸாகும் நடிகர் அர்ஜூன் கதையில் உருவாகியுள்ள மார்ட்டின்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேஜிஎப்’ படங்களுக்குப் பிறகு கன்னடத் திரையுலகத்தில் அதிக பட்ஜெட் படங்கள் வருடத்திற்கு ஒன்றிரண்டாவது வெளியாகின்றன. அப்படி ஒரு படமாக ‘மார்ட்டின்’ படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்கள். கர்நாடகாவைப் பொறுத்தவரையில் இப்படம் அதிக தியேட்டர்களில் வெளியாகலாம். இருந்தாலும் ரஜினிகாந்த் நடிக்கும் படம் வருகிறதென்றால் பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களில் அப்படத்திற்குத்தான் அதிக தியேட்டர்கள் கிடைக்கும்.பிறமொழிப் படங்களை வெளியிடும் மாநிலங்களான கேரளா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் ரஜினி படத்திற்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும். அந்தப் போட்டியை ‘மார்ட்டின்’ சமாளிக்குமா என்பது சந்தேகம்தான். துருவ் சர்ஜா, வைபவி சாண்டில்யா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். நடிகர் அர்ஜுன் இப்படத்திற்கு கதை எழுதியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News