தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர், 1980களில் நடித்த புகழ்பெற்ற நடிகை மேனகாவின் மகள். கீர்த்தியின் தந்தை சுரேஷ் மலையாளத் திரையுலகத்தில் முக்கிய தயாரிப்பாளராக உள்ளார். கீர்த்தி, தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
கீர்த்தி தனது சிறுவயது நண்பர் ஆண்டனி தட்டிலுடன் காதலித்துவருகிறார். ஆண்டனி தட்டில் தற்போது துபாயில் வசித்து வருகிறார். இவர்களின் காதலை இரு குடும்பங்களும் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இருவரது திருமணம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
தகவலின்படி, கோவாவில் டிசம்பர் 11ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கீர்த்தி, ஹிந்தி திரைப்படம் ‘தெறி’யின் ரீமேக்கான ‘பேபி ஜான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில், ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணி வெடி’ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.