Friday, October 18, 2024

விரைவில் ரம்யா பாண்டியனுக்கு டூம் டூம் டூம்? மாப்பிள்ளை இவர்தானாம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜூ முருகன் இயக்கத்தில் உருவான ‛ஜோக்கர்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன். அதன் பின்பு, அவர் ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதேசமயம், பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் அவர் மேலும் புகழ் பெற்றார். இவை மட்டுமல்ல, அவர் வெளியிடும் மொட்டை மாடியில் மற்றும் வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில், திடீரென சத்தமின்றி ரம்யா பாண்டியனின் திருமணம் முடிந்தது. கடந்தாண்டு, அவர் பெங்களூரில் உள்ள கலை ரவி சங்கர் ஆஸ்ரமத்தில் இயங்கும் யோகா பயிற்சி மையத்தில் சேர்ந்தார். அங்கு யோகா பயிற்சி மேற்கொண்டபோது, அவருக்கு யோகா ஆசிரியராக இருந்த லோவெல் தவான் என்பவருடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரின் காதல் இப்போது திருமணத்தில் முடிவடைந்துள்ளது. மணமகனாக உள்ள லோவெல் தவான் பஞ்சாப் லூத்தியானாவைச் சேர்ந்தவர். பல்வேறு இடங்களில் செயல்படும் பப்ளிக் லேபராட்டரியின் உரிமையாளராக இருக்கிறார். இவர்களின் திருமணம் ரிஷிகேஷில், கங்கை நதி பாயும் கோயிலின் அருகே நடைபெற உள்ளது.

ரம்யா பாண்டியன் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர். அவரின் தந்தை துரை பாண்டியன் காலமானவர். அவரின் தாய் சாந்தி, சகோதரி திரிபுர சுந்தரி (பேஷன் டிசைனர்) மற்றும் தம்பி பரசுராமன் ஆகியோர் குடும்பத்தினர். பரசுராமன் பிலிம் டெக்னாலஜியில் படித்து, தற்போது துபாயில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர்களின் திருமணம் அடுத்த மாதம் நவம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 15ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News