சமீபத்திய நேர்காணலில் பேசிய நடிகர் வடிவேலு, “மாரீசன் என்கிற பெயரே வித்தியாசமாக இருந்தது. இயக்குநரிடம், கதைக்கும் தலைப்புக்குமான காரணம் என்ன எனக் கேட்டபோது, ராமாயணத்துக்கும் இப்படத்தின் கதைக்குமான தொடர்பைக் குறித்துச் சொன்னது நன்றாக இருந்தது. மாமன்னனுக்குப் பிறகு பகத் பாசிலுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்ததுடன், அவர் என்னுடைய ரசிகர் என்பது கூடுதல் மனநிறைவைக் கொடுக்கிறது. மாரீசன் திரைப்படம் சமூக விழிப்புணர்வைப் பேசுகிறது. இன்றைய கால இளைஞர்களுக்கான படம் என்பதைத் தாண்டி அனைவரும் மாரீசனை ஏற்றுக்கொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
