Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

கோட்டி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் பாலாவுக்கு மிக்க நன்றி… நடிகர் அருண் விஜய் நெகிழ்ச்சி பதிவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான படம் வணங்கான். இப்படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார்.படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தாலும், பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்பார்வையுடன் செய்துள்ளார்.

திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்த வெற்றியை தொடர்ந்து, நடிகர் அருண் விஜய் இயக்குநர் பாலாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “கோட்டி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் பாலாவுக்கு மிக்க நன்றி. ஒரு வார்த்தைகூட பேசாமல், அனைவரின் இதயத்தையும் வென்றுவிட்டோம். இதற்கெல்லாம் காரணம் நீங்கள்தான். என்னுள் எவ்வளவு திறமை உள்ளது என்பதை எனக்குக் காண்பித்தீர்கள். இதற்காக என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மனமார்ந்த நன்றி!” என தனது நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News