இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கிய ‘பிரம்மயுகம்’ திரைப்படம் 2024ஆம் ஆண்டு வெளியானது. இதில் நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில், நடித்து மிரட்டியிருந்தார். மலையாளத்தின் பழங்குடியின கதைகளை மையமாகக் கொண்டு, சாதிய கொடுமைகளை கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் இப்படம் அமைந்திருந்தது.திரைப்படம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதற்காக மம்மூட்டிக்கு கேரள அரசின் சிறந்த நடிகர் விருது சமீபத்தில் கிடைத்தது. மேலும், படக்குழுவும் சேர்த்து மொத்தம் 4 விருதுகளை பெற்றுள்ளது.இந்நிலையில், அமெரிக்காவின் ஆஸ்கர் மியூசியம் திரையரங்கில், இந்த திரைப்படம் பிப்ரவரி 2026ல் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான புதிய படம் தற்போது ₹50 கோடிக்கு மேல் வசூல் செய்து அசத்தி வருகிறது. இந்தப் படம் ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிப்ட் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

