Touring Talkies
100% Cinema

Friday, June 20, 2025

Touring Talkies

தன்மீதான விமர்சனத்துக்கு மாளவிகா மோகனன் அளித்த நச் பதில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘தங்கலான்’ படத்திற்கு பிறகு தற்போது தமிழில் கார்த்தியுடன் ‘சர்தார் 2’ படத்தில் நடித்துவரும் மாளவிகா மோகனன், தெலுங்கில் பிரபாஸுடன் ‘தி ராஜா சாப்’ மற்றும் மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘ஹிருதயபூர்வம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகா, தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், அந்த புகைப்படங்களை கண்ட‌‌ ரசிகர் ஒருவர் “போட்டோஷூட், மாடலிங்கில் நீங்கள் எடுத்துக்கொள்கிற முயற்சியை சினிமாவில் எடுக்கவில்லை போல. அதற்குக் காரணம் என்ன?” என்ற கேள்வி கிண்டலாக எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், “நான் நடித்த ‘தங்கலான்’ படத்தில் நான் எடுத்த கடுமையான உழைப்பைக் காணவில்லை போலிருக்கிறது. அந்த படத்தில் உடலளவில் சிரமப்பட்டு நடித்தேன். நான் நடித்த பிற படங்களிலும் நான் எடுத்த உழைப்பை பாராமல் இப்படி விமர்சனம் செய்வது உங்கள் பார்வையின் குறைபாடாகவே இருக்கிறது” என பதிலளித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News