மலையாள திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான கே.யூ. மோகனனின் மகள் மாளவிகா மோகனன். “பட்டம்போலே” எனும் துல்கர் சல்மான் நடித்த படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழில் ரஜினிகாந்தின் “பேட்ட” படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து “மாஸ்டர்,” “மாறன்,” “தங்கலான்” போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அடுத்ததாக, பிரபாஸுக்கு ஜோடியாகவும், “சர்தார் 2” படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
தீபாவளி அன்று அதிகமாக புகைப்படங்களை பகிர முடியவில்லை என்று ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு, மாளவிகா மோகனன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சமீப காலமாக, மாளவிகா மோகன் பாரம்பரிய உடைகளிலிருந்தும் மாடர்ன் உடைகளிலிருந்தும் கவர்ச்சியை வெளிப்படுத்தி, தனது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.