கருடன் திரைப்படத்திற்கு பிறகு, நடிகர் சூரி தற்போது, ‘விலங்கு’ இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் மேற்கொண்டு வருகிறார். இசையமைப்பாளராக ஹேஷாம் அப்துல் வஹாப் பணியாற்றுகிறார். இந்தப் படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்து வருகிறார்.
திருச்சி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த படத்தின் கடைசிக்கட்ட பணிகள் முழு வேகத்திலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் , மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படம் மே 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.