Touring Talkies
100% Cinema

Monday, July 28, 2025

Touring Talkies

‘மகா அவதார் நரசிம்மா’ திரைப்படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஷ்ணுவின் வராக மற்றும் நரசிம்ம அவதாரங்களை அழகாக விவரிக்கும் அனிமேஷன் திரைப்படம் ‘மகா அவதார் நரசிம்மா’. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய பல மொழிகளில் வெளியான இந்த படத்தை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். திரைக்கதையை ஜெயபூர்ணா தாஸ், அஷ்வின் குமார், மற்றும் ருத்ர பிரதாப் கோஷ் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்தக் கதையின் மையம், முனிவர் கஷ்யப்பர் மற்றும் திதி தம்பதிகளுக்கு தவறான காலத்தில் பிறந்த இரு அசுர சகோதரர்களான ஹிரண்யாக்ஷன் மற்றும் ஹிரண்யகசிபு என்பவர்களைச் சுற்றியே நடக்கிறது. இந்த இருவரும் விஷ்ணுவை அழிக்கவேண்டும் எனத் தீர்மானித்திருந்தனர். ஆனால் அவர்களை விஷ்ணுவை கண்டுபிடிக்க முடியாத நிலையில், ஹிரண்யாக்ஷன் பூமாதேவியை கடலுக்குள் மறைத்து விடுகிறார். இதனையடுத்து விஷ்ணு வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனை அழித்து, பூமியை மீட்டெடுக்கிறார்.

மற்றொருபுறம் ஹிரண்யகசிபு, பிரம்மாவை நோக்கி கடுமையான தவம் இருந்து, தனக்கு மனிதர், விலங்குகள், பகல், இரவு, உள்ளே, வெளியே, உயிருள்ள அல்லது உயிரற்ற ஆயுதங்களால் கொல்ல முடியாததாகச் சில வரங்களை பெற்றுக்கொள்கிறான். பின்னர், அந்த வரங்களை அடிப்படையாகக் கொண்டு, தேவர்களையும், விஷ்ணு பக்தர்களையும் கொடுமைப்படுத்தி, தன் ஆட்சியை எடுக்கிறான்.அவனுக்குப் பிறக்கும் மகன் பிரகலாதன், கருவிலிருந்தே விஷ்ணுவின் நாமத்தை கேட்டு வளர்கிறான். மகனை மக்கள் தந்தையை கடவுளாகக் கருதும்போது கூட, பிரகலாதன் விஷ்ணுவை மட்டுமே வணங்குகிறான். இது ஹிரண்யகசிபுவுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. பலவழிகளில் மகனை அழிக்க முயற்சிக்கிறான். ஆனால் ஒவ்வொரு முறையும், விஷ்ணு பிரகலாதனை காப்பாற்றுகிறார்.

இறுதியாக ஹிரண்யகசிபு, “இந்தத் தூணில் உன் விஷ்ணு இருக்கிறாரா?” என மகனை கேட்கிறான். “அவர் எங்கும் இருக்கிறார்” எனும் பிரகலாதனின் பதிலை கேட்டதும், தூணை உடைத்து விடுகிறான். அந்த தூணிலிருந்து நரசிம்ம அவதாரம் எடுத்துச் தோன்றும் விஷ்ணு, ஹிரண்யகசிபுவுக்கு பெற்றிருந்த அனைத்து வரங்களையும் கவனித்து, அந்த வரங்களுக்கு எதிராக புத்திசாலித்தனமாக அவனை அழிக்கிறார். இதுவே இந்தப் படத்தின் கதையின் மூலதோற்றம். இந்த அனிமேஷன் படத்தை ஆயிரக்கணக்கான நிபுணர்கள் மிகுந்த நேர்த்தியுடன் உருவாக்கியுள்ளனர். இது 2D மற்றும் 3D வடிவங்களில் வெளியாகியுள்ளது. குறிப்பாக 3D வடிவில் காணும் போது இது ஒரு மிகச் சிறந்த திரைப்பட அனுபவத்தை தருகிறது.

காஷ்யப்பர் மற்றும் திதி வழியாக ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு உருவாகும் கட்டத்தில் இருந்து கதை துவங்குகிறது. வராக அவதார காட்சிகள், கடலுக்குள் ஹிரண்யாக்ஷனுடன் விஷ்ணு மோதும் தருணங்கள் அற்புதமாக காண்பிக்கப்படுகின்றன. பின்னர் ஹிரண்யகசிபுவின் வளர்ச்சி, பிரகலாதனின் பிறப்பு மற்றும் வளர்ப்பு ஆகியவையும் அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது. அனிமேஷன் திரைப்படம் என்றாலும், பிரகலாதனின் உருவம், குரல் மற்றும் உடல்மொழி ஆகியவை நிஜ வாழ்வை போல் இருக்கின்றன. விஷ்ணுவின் மீது அவருடைய பக்தியும், தந்தையின் கொதிக்கும் கோபமும் சீராக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிரகலாதனை பல்வேறு முறையில் கொல்ல முயற்சிக்கும் காட்சிகள்  ஆயுதங்களால் தாக்குதல், மதமுள்ள யானையின் கீழே மிதிக்க வைக்கும் முயற்சி, கடலில் தள்ளி கொல்லும் திட்டம் போன்றவை – அனைத்திலும் விஷ்ணுவின் அருள் அவனை பாதுகாக்கிறது, என்பதைக் கண்காட்சியாகத் தெரிவிக்கின்றன.

பிரகலாதனுக்கு கடலில் விஷ்ணு தரிசனம் அளிக்கும் காட்சி, உண்மையில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மிகுந்த பக்தி உணர்வைத் தருகிறது. அனிமேஷன் படம் என்பதை முற்றிலும் மறந்துவிடும் அளவிற்கு, இந்த காட்சிகள் நம் உள்ளத்தை வருடுகின்றன. அரண்மனை, அசுரர்களின் நிலம், காடுகள், மலைகள், கடல், குருகுலம் போன்ற இடங்கள் மிகுந்த நுணுக்கத்துடன், சிற்பக் கலையைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு மிகச்சிறந்த காட்சிகள். இந்தத் திரைப்படத்தின் முக்கியக் கிளைமாக்ஸ் – அரண்மனையில் தூணிலிருந்து நரசிம்மர் தோன்றும் அதிரடி காட்சி – நிச்சயமாக முழு படத்திற்கும் தலைச்சிறந்த ஹைலைடாகும்.

- Advertisement -

Read more

Local News