இந்தியத் திரையுலகத்தில் இந்த வருடம் இதுவரையில் வெளிவந்த படங்களில் அதிக லாபத்தைக் கொடுத்த படமாக ‘மகா அவதார் நரசிம்மா’ படம் அமைந்துள்ளது. சுமார் 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இவ்வளவு குறைந்த பட்ஜெட், பெரிய லாபம் என்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அனிமேஷன் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையையும் இந்தப் படம் பெற்றுள்ளது. இந்தப் படம் தந்த வெற்றியால் இது போன்று பல ஆன்மிகப் படங்கள் வருவதற்கு ஒரு வழியை ஏற்படுத்தித் தந்துள்ளது.
