இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால், தமிழில் “துப்பாக்கி”, “அஞ்சான்”, சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயன் நடித்த “மதராஸி” போன்ற படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக “மதராஸி” படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், வித்யுத் ஜம்வால் “ஸ்ட்ரீட் பைட்டர்” என்ற ஹாலிவுட் ஆக்ஷன் படத்தில் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் ஆண்ட்ரு கோஜி, நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கின்றனர் என்றும், இது கேப்காமின் பிரபலமான வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது என கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான பாரமவுண்ட் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக இதை உறுதிப்படுத்தியுள்ளது. “ரகசியங்களை நீண்ட நாள் மறைக்க முடியாது. ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ தற்போது தயாரிப்பில் உள்ளது. 2026 அக்டோபர் 16-ஆம் தேதி வெளியாகிறது” என தெரிவித்ததோடு, அதில் நடித்துவரும் நடிகர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது.