‘லெகஸி’ என்ற வெப் தொடர் கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ளது. இந்த தொடர் தமிழில் தயாராகி, பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதில் மாதவன் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கவுதம் கார்த்திக், குல்ஷன் தேவையா, அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தத் தொடரை சாருகேஷ் சேகர் இயக்கியுள்ளார்.

சக்தி வாய்ந்த கேங்ஸ்டர் சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் ஒரு பெரியவர், தன்னுக்குப் பிறகு தனது சாம்ராஜ்யத்தை நடத்த தகுதியான ஒருவரைத் தேடுகிறார். அந்த அதிகாரப் போட்டியில்தான் மாதவனும் நிமிஷாவும் மோதுகிறார்கள் என்பதே கதை. இதில் நிமிஷா முதன்முறையாக ஒரு லேடி கேங்ஸ்டராக நடித்திருப்பது சிறப்பு.
தொடரைப் பற்றிச் சொல்வதாவது, மாதவன் கூறியதாவது: “ஒரு கதை கேட்கும்போது அது உங்களுக்குள் இருக்கும் நடிகரை உற்சாகப்படுத்தும் வகையில் இருந்தால் நிச்சயமாக அதில் நடிக்க ஒப்புக்கொள்வீர்கள். அப்படித்தான் நான் ‘லெகஸி’ சீரிஸிலும் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்திய ஓடிடி தளத்தில் இதுவரை இல்லாத வகையில் சிறப்பான திருப்பங்களும் கதைக்களமும் கொண்டதாக இது உருவாகியுள்ளது. இயக்குநர் சாருகேஷ் சேகர் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.