மாதவன் மற்றும் கங்கனா ரனாவத் இணைந்து நடித்த ‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’ படத்திற்கு பத்து ஆண்டுகளுக்கு பிறகு, இவர்கள் மீண்டும் ‘சர்க்கிள்’ என்ற புதிய படத்தில் இணைந்துள்ளனர். இது ஒரு அசாதாரண உளவியல் திரில்லர் படம் என கூறப்படுகிறது. இப்படத்தில் அவந்திகா மிஸ்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எ.எல். விஜய் இயக்கியுள்ள இப்படத்தை Trident Productions நிறுவனம் தயாரித்துள்ளது. ஊட்டி, சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஐதராபாத் போன்ற இடங்களில் படமாக்கப்பட்ட இந்த படம், பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. தற்போது படத்தின் பின்னணிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதலில் தசரா பண்டிகையை ஒட்டி இப்படம் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சர்க்கிள்’ படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது.

